Ind vs Pak | India Delivers a Crushing Counter-Response to Pakistan

பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தீவிரவாத வழக்கு ஒன்றில் இந்திய நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் தரப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாத வழக்கு ஒன்றில் (Asiya Andrabi ) ஆசியா ஆண்ட்ராபி என்ற காஷ்மீர் பிரிவினைவாத தலைவருக்கு சமீபத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், காஷ்மீரில் மனித உரிமைகள் ஒடுக்கப்படுவதாக விமர்சித்திருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு இதைப் பற்றி பேச உரிமையில்லை என்றும், பொய்யான தகவல்களை பரப்பாமல் தங்களது மனித உரிமை மீறல்கள் குறித்து முதலில் பாகிஸ்தான் ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com