`ஐபோன் 15' வாங்கியவர்கள் பேரதிர்ச்சி

x

புதிதாக வெளியிடப்பட்ட 'ஐபோன் 15' சீரிஸ் ஸ்மார்ட்போனில், பி.எஸ்.என்.எல். சிம் வேலை செய்யவில்லை என, வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்...

ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐபோன் 15' மற்றும் 'ஐபோன் 15 ப்ரோ' மாடல் ஸ்மார்ட்போன்கள் அண்மையில் அறிமுகமானது. இதனை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டிவரும் நிலையில், இந்த போன்களில் பி.எஸ்.என்.எல். சிம்மை பயன்படுத்த முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து ஆன்லைன் வழியாக புகார் தெரிவித்தும் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டும் வாடிக்கையாளர்கள், 'ஐபோன் 14' மாடல் வெளியானபோதும் இதேபோன்ற பிரச்சினையை சந்தித்ததாக தெரிவிக்கின்றனர். ஜியோ, ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட சிம்கள் சப்போர்ட்(support) ஆகும் சூழலில், பொதுத்துறை நிறுவனத்தின் பி.எஸ்.என்.எல். சிம் சப்போர்ட் ஆகாததால், அதனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்