அயர்லாந்தில் இந்தியரின் டிரெஸ்ஸை கழட்டி தாக்கிய கும்பல்
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ள டல்லாட்
Tallaght பகுதியில், 40 வயது மதிக்கத்தக்க இந்தியர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், அவரது ஆடைகளைக் களைந்து சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குழந்தைகளிடம் தகாத முறையில் இந்தியர் நடந்துகொண்டதாக தவறான குற்றச்சாட்டுகளைக்கூறி அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அயர்லாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இனவெறி காரணமாக தாக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்கப்பட்ட இந்தியர் 3 வாரங்களுக்கு முன்பு அயர்லாந்து சென்றது தெரியவந்துள்ளது.
இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அயர்லாந்துக்கான இந்திய தூதர் அகிலேஷ் மிஸ்ரா,
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென கூறினார்.
