பிரேசிலில் குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி

x

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கானா, டிரினிடாட்-டொபாகோ, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவுக்கு (Rio De Janeiro) பிரதமர் மோடி சென்றடைந்தார். 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்நிலையில், ரியோடிஜெனிரோவில் பிரதமர் மோடிக்கு, இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கிருந்த குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி, குழந்தைகளின் பாடிய பாடலையும் கேட்டு ரசித்தார்.

பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட கலாச்சார நடனம் மற்றும் பாடல்களை பாடி பிரேசில் வாழ் இந்தியர்கள் வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்