Elon Musk | "இன்னும் 20 ஆண்டுகள் தான்..வேலை பார்ப்பதே ஹாபி ஆகிவிடும்" பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்

x

இன்னும் 20 ஆண்டுகளில் வேலை பார்ப்பதே பொழுதுபோக்கு போல ஹாபியாகி விடும் என தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ரோபோக்களின் ஆதிக்கத்தால், இன்னும் 20 அல்லது அதற்கும் குறைவான ஆண்டுகளில், வேலை பார்ப்பதே நமது விருப்பத் தேர்வாகி, ஒரு ஹாபியை போல மாறிவிடும் என குறிப்பிட்டார். வீட்டில் செடி வளர்த்து காய்கறி விளைவிக்கும் வாய்ப்பு இருந்தும், நாம் கடைகளில் அவற்றை வாங்குவதைப் போல, வரும் காலத்தில் வேலைவாய்ப்பும் மாறிவிடும் என எலான் மஸ்க் கணித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்