யாருமே எதிர்பாரா நேரத்தில் டிரம்ப் வெளியிட்ட முக்கிய செய்தி
அமெரிக்காவில் வரி விதிப்பு நடவடிக்கைகளால் 15 டிரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யப்பட உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவில் புதிய சாதனையாக, 15 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்யப்படும் என்றும், இதற்கு வரிவிதிப்பு நடவடிக்கைகளே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், வரி விதிப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில், ஒருவேளை நீதிமன்றம் இந்த வரி விதிப்புகளை நிறுத்தினால், இந்த முதலீடுகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் விலைவாசி குறைந்துவிட்டதாகவும், கிட்டத்தட்ட பணவீக்கம் என்பது இல்லை என்றும் கூறியுள்ளார். எரிசக்தி விலைகள் பெருமளவில் வீழ்ச்சி அடைந்து வருவதாகவும், பெட்ரோல் கடந்த பல வருடங்களாக குறைந்த விலையிலேயே உள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
