தன்பாலின ஈர்ப்பு... இமாமுக்கு நேர்ந்த பயங்கரம்
உலகின் முதல் தன்பாலின ஈர்பாளராக அறிவித்துக் கொண்ட இமாம், சுட்டுப் படுகொலை செய்யபட்டிருக்கிறார். பால்புதுமையினர் உலகத்தை பதறவைத்த கொலை சம்பவத்தின் பின்னணி என்ன..?
காரில் சென்று கொண்டிருந்த இமாமை, வழி மறித்த இருவர் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பி சென்ற சிசிடிவி காட்சிகள் தான் இவை.
உலகெங்கும் உள்ள LGBT கம்யூனிட்டியை சேர்ந்தவர்களை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தி இருக்கிறது இந்த கோர சம்பவம்.
தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனை சேர்ந்தவர் Muhsin Hendricks ( முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ்) .
இந்தோ - இந்திய மூதாதேயர்களின் வழிவந்த இவர், பிறந்து வளர்ந்தது எல்லாம் தென் ஆப்ரிக்காவில் தான்.
இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த Muhsin Hendricks, ஒருதன் பாலின ஈர்ப்பாளர்.
தீவிர மதப் பற்றுள்ள குடும்ப பிண்ணனியில் பிறந்தாலும் தனதுபாலின தேர்வு பற்றி வெளிப்படையாக அறிவித்தவர் Muhsin Hendricks.
தான் ஒரு gay என்பதை அவர் வெளி உலகத்திற்கு பகிரங்கமாக அறிவித்ததோடு, ஏற்கனவே இஸ்லாமிக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்ததால், இமாமாகவும் மாறி இருந்தார்.
இஸ்லாத்தில் இமாம் என்பவர்கள் மத தலைவராகவும் தொழுகையை நடத்துபவர்களாகவும் அறியப்படுபவார்கள்.
தன்பாலின ஈர்பாளர் என வெளிப்படையாக அறிவித்த உலகின் முதல் இமாம், என்ற பெயரும் Muhsin Hendricks-க்கு கிடைத்து.
இது அவருக்கு உலகமெல்லாம் வாழும் LGBT சமூகத்தினரிடத்தில் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அதே நேரம் வழக்கம் போல எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொடுத்தது.
ஆனால் LGBT தொடர்பான தனது பங்களிப்பை இன்னும் வேகப்படுத்திய Muhsin Hendricks, தன்பாலின ஈர்பாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக Masjidul Ghurbaah( மஸ்ஜிதுல் குர்பா) என்ற தனி மசூதியை நடத்தி வந்தார்.
தனது மசூதியில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமணங்களையும் நடத்தி வைத்தவர்.
இதனால் பெரும்பாலன இஸ்லாம் அமைப்புகளின் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டார்.
அதோடு சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து, Muhsin Hendricks மீது கட்டுக்கடங்காத விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டுக் கொண்டே தான் இருந்தது.
இந்த நிலையில் தான் சம்பவத்தன்று, தனது காரில் சென்று கொண்டிருந்த இமாம் Muhsin Hendricks-ஐ, எதிரில் வந்த ஒரு கார் வழிமறித்திருக்கிறது.
உள்ளே இருந்து இறங்கிய, இரண்டு மர்ம நபர்கள் கண் மூடி தனமாக கார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பித்து ஓடி இருக்கிறார்கள்.
நடந்த தாக்குதலில் பின் இருக்கையில் இருந்த இமாம் Muhsin Hendricks படுகாயம் அடைந்து இறந்துவிட, காரை ஓட்டி வந்த நபரும் காயம் அடைந்திருக்கிறார்.
Muhsin Hendricks கொலை செய்யப்பட்ட சம்பவம் LGBT சமூகத்தினரிடையே பெரும் சோகத்தையும் அதிற்சியையும் ஏற்படுத்தி இருந்த நிலையில்.
தன்பாலின ஈர்பாலர்கள் மீது வெறுப்பு மனம் கொண்ட அடிப்படை வாதிகளால் இந்த படுகொலை நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
ஆனாலும், இந்த கொலை சம்பவம் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் இமாம் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தென் ஆப்ரிகாவின் முஸ்லிம் தீதித்துறை கவுன்சில் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
Muhsin Hendrick தன்பாலின ஈர்பாலர் உரிமைகாக போராடியதே, அனைவருக்கும் வாழ உரிமை உள்ளது என்ற அடிப்படை சித்தாந்திற்காக தான். ஆனால் தற்போது அவரது உயிர் பறிக்கபட்டிருப்பது அதிர்சியளிப்பதாக இமாமின் ஆதரவாளர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
