இந்தியாவில் உருவாக்கினால்.. மீண்டும் கெடுபிடி காட்டும் டிரம்ப்

x

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25% வரி - டிரம்ப் எச்சரிக்கை

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் வெளிநாடுகளுக்கு கடுமையாக வரி விதித்து வரும் டிரம்ப், இந்தியாவிலோ அல்லது பிறநாடுகளிலோ ஆப்பிள் ஐபோன்கள் தயாரிக்கப்படுவதை,,, தான் விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள டிரம்ப், இந்தியாவிலோ அல்லது பிறநாடுகளிலோ உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் ஐபோன்கள் விற்கப்பட்டால் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என கெடுபிடி காட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்