அலைச்சறுக்கி மகிழ்ந்த கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஏராளமானோர் அலைச்சறுக்குதலில் ஈடுபட்டனர்.
அலைச்சறுக்கி மகிழ்ந்த கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்
Published on
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஏராளமானோர் அலைச்சறுக்குதலில் ஈடுபட்டனர். கோகோ கடற்கரையில் நடைபெற்ற இந்த அலைச்சறுக்கில், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, அலைச்சறுக்கி அசத்தினர். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியின் மூலம், புற்றுநோயாளிகளுக்கு உதவ நிதி திரட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பார்வையாளர்கள் கடற்கரையில் கூடியிருந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com