மனித உரிமை மீறல்களை மறைக்க பாகிஸ்தான் முயற்சி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள கில்கிட்-பல்டிஸ்தான் பிராந்தியத்துக்கு மாகாண அந்தஸ்து வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்களை மறைக்க பாகிஸ்தான் முயற்சி
Published on

கில்கிட்- பல்டிஸ்தான் உள்பட ஜம்மு- காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் ஆகும். 1947-ம் ஆண்டு, இந்தியாவுடன் காஷ்மீர் சட்ட ரீதியாக இணைந்த போதே இது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிக்கு தற்காலிகமாக மாகாண அந்தஸ்து வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள கில்கிட்-பல்டிஸ்தான் மீது பாகிஸ்தானுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

கில்கிட்-பல்டிஸ்தானில் நடக்கும் மனித உரிமை மீறல்களையும் மறைக்கவே தற்காலிக மாகாண அந்தஸ்து வழங்கப்படும் என்ற அறிவிப்பை பாகிஸ்தான்வெளியிட்டுள்ளதாகவும், அதை இந்தியா நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியிலிருந்து பாகிஸ்தான்

உடனடியாக வெளியேற வேண்டும் என்றும்

அனுராக் ஸ்ரீவஸ்தவா கேட்டு கொண்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com