காசாவில் கொடூரம்! இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு ஒரே வாரத்தில் 613 பேர் பலி

x

காசாவில் உதவி மையங்களுக்குச் செல்ல முயன்றவர்களில் 613 பேர் உயிரிழந்துள்ளதாக, ஐ.நா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 27 ம் தேதியில் இருந்து தற்போது வரை, 613 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள ஐநா, இதில் உதவி மையத்தின் அருகிலேயே 509 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரம் உணவை வினியோகப்பதற்கு வரும் போது, மக்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் தங்கள் தவறுகளை ஏற்றுக் கொண்டு, சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்