சீன ஆதிக்கத்தை எதிர்த்து கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக, மக்கள் வீதிக்கு வந்து போராட தொடங்கி உள்ளனர். அவர்களை ஹாங்காங் போலீசார் விரட்டி அடித்து வருவதும் தொடர் கதையாக மாறியுள்ளது. இந்நிலையில், வர்த்தகத்தின் முக்கிய இடமாக கருதப்படும் மத்திய மாவட்டத்தில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கூடி எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பினர். பாதுகாப்பு படையினர் போல உடையணிந்து, தடை செய்யப்பட்ட முக கவசத்தை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு உருவானது. இரவில் கவச வாகனத்தில் வந்த கலவரத்தடுப்பு போலீசார், போராட்டக்காரர்கள் மீது, தாக்குதல் நடத்தியுள்ளனர்.