அதிக வெப்பம் - 2018ம் ஆண்டுக்கு 4வது இடம் : கவலை தரும் ஐ.நா. அறிக்கை

அதிக அளவு வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் கடந்த ஆண்டு 4வது இடத்தை பிடித்துள்ளது.
அதிக வெப்பம் - 2018ம் ஆண்டுக்கு 4வது இடம் : கவலை தரும் ஐ.நா. அறிக்கை
Published on
அதிக அளவு வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் கடந்த ஆண்டு 4வது இடத்தை பிடித்துள்ளது. உலக வெப்பமயமாதல் தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, கிரீஸில் ஏற்பட்ட காட்டுத்தீ, தென் ஆப்பிரிக்காவின் வறட்சி மற்றும் கேரளாவின் வெள்ளப்பெருக்கு ஆகியவை ஐ.நா.வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் முனைப்பு காட்டவில்லை என்றால் இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும் எனவும் ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com