Israel Iran War | Hezbollah | இஸ்ரேல் படையினர் மீது ரணகள தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல்: லெபனானில் மக்கள் வெளியேற எச்சரிக்கை

#IsraelIranWar | #Hezbollah | #Lebonan | #WorldNews | #ThanthiTV Israel Iran War | Hezbollah | இஸ்ரேல் படையினர் மீது ரணகள தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா - இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை இஸ்ரேல் தாக்குதலால் லெபனானின் ஹாஸ்மியே பகுதியில் கட்டடங்கள் பல சேதமடைந்த நிலையில், பொதுமக்கள் இடிபாடுகளை அகற்றினர். மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவும் நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியது. இதனால் இஸ்ரேல் தெற்கு லெபனானில் தாக்குதல்களை மேற்கொண்டது. இதற்கிடையில், எல்லைப்பகுதியான மெதுலா அருகே திரண்டிருந்த இஸ்ரேல் படையினரைக் குறிவைத்து ஹிஸ்புல்லா பல ராக்கெட்டுகளை ஏவியது. இதனால், லெபனானில் உள்ள 16 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், சமீபத்திய தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டதுடன் 335 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com