பறக்க ஆரம்பித்ததும் மரம் தட்டி கீழே விழுந்த ஹெலிகாப்டர்.. பரபரப்பு காட்சிகள்
லக்சம்பர்கில் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளான காட்சி வெளியாகியுள்ளது. கடந்த 23 ஆம் தேதி நோதும் (nothum) நகரில், சாலை விபத்தில் சிக்கியவரை மீட்க ஹெலிகாப்டர் விரைந்து சென்றது. அடிபட்டவரை மீட்டுக்கொண்டு, புறப்பட்டபோது, திடீரென ஹெலிகாப்டரின் வால் பகுதி திடீரென மரத்தில் பட்டு கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், தடுமாறிய ஹெலிகாப்டர் சில நொடிகளில் கீழே விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Next Story
