அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நகர் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தெருக்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். கடைகள் முன்பு மணற்மூட்டைகளை அடுக்கி மழை நீர் கடைகளுக்குள் வராத வண்ணம் பாதுகாத்து வருகின்றனர்.