அமெரிக்காவுடன் இந்தியா அதை பற்றி பேசியதா? - வெளியான தகவல்
அமெரிக்க தரப்பிலான உரையாடலின் போது வர்த்தகம் குறித்து எதுவும் பேசவில்லை என்று, மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பிறகு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மே 9ஆம் தேதி, பிரதமர் மோடியிடம் பேசினார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மே8 மற்றும் மே10 அன்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உடனும், மே 10ஆம் தேதி தேசிய பாதுகாப்பு ஆலோசர் உடனும் பேசினார். இந்த விவாதங்களில் எதிலும் வர்த்தகம் செய்வது குறித்து எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
Next Story
