Hamas | Trump | டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிந்த ஹமாஸ் - காசா போரில் பெரும் திருப்பம்
காசா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை செயல்படுத்த தயாராக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமைக்குள் பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால், ஹமாஸ் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில், இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில்,காசா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தினார்.இதனை உடனடியாக செயல்படுத்த தயாராகி வருவதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
Next Story
