ஹமாஸ் நடத்திய தாக்குதல் - இஸ்ரேலியர் உடலை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் ஐநா ஊழியர்? வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் அதிகாரிகள்

x

இஸ்ரேலில் அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸின் எல்லை தாண்டிய தாக்குதலின் போது, சுடப்பட்ட இஸ்ரேலியரின் உடலை ஏற்றிக் கொண்டு தெற்கு இஸ்ரேலிய கிராமத்தில் இருந்து ஐ.நா நிவாரணப் பணியாளர் ஒருவர் வாகனத்தை ஓட்டிச் செல்வதாக இஸ்ரேலிய அதிகாரிகள் வீடியோவை வெளியிட்டுள்ளனர்...

ஹமாஸ் நடத்திய தாக்குதல்

இஸ்ரேலியர் உடலை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் ஐநா ஊழியர்?

வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் அதிகாரிகள்பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா நிவாரண பணி முகமையைச் சேர்ந்த சமூக சேவகரான அலி முஸ்ஸலேம் அல் நமி, கிப்புட்ஸ் பீரியில் வாகனத்தை ஓட்டிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 தாக்குதலின் போது ஐநா ஊழியர்கள் டத்தல்கள் மற்றும் கொலைகளில் பங்கு பெற்றதாக இஸ்ரேல் உளவுத்துறை குற்றச்சாட்டை முன்வைத்தது... இதனால் பல நாடுகள் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா நிவாரண பணி முகமைக்கு நிதியுதவியை முடக்கின... ஆனால் இதுகுறித்து அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இஸ்ரேலிய அதிகாரிகளிடமிருந்து எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்