நெதர்லாந்து செஸ் தொடர் - முதலிடத்தில் நீடிக்கும் குகேஷ்
நெதர்லாந்து செஸ் தொடர் - முதலிடத்தில் நீடிக்கும் குகேஷ்
நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் டாடா ஸ்டீல் செஸ் (TATA STEEL CHESS) தொடரின் 9வது சுற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ் (GUKESH) வெற்றிவாகை சூடினார். 9வது சுற்றில் சக இந்திய வீரர் லியோன் லுக் மென்டோன்கா (Leon Luke Mendonca) உடன் குகேஷ் மோதினார். போட்டியில் வெள்ளை நிற காய்களில் விளையாடிய குகேஷ், 43வது நகர்த்தலில் லியோன் லுக் மென்டோன்காவை வீழ்த்தினார். இதன்மூலம் நடப்பு தொடரில் நான்காவது வெற்றியைப் பதிவு செய்த குகேஷ், 6 புள்ளி 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
Next Story
