"அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்" - கோத்தபய ராஜபக்சே ட்விட்டரில் தகவல்

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபய ராஜபக்சே, அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
"அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்" - கோத்தபய ராஜபக்சே ட்விட்டரில் தகவல்
Published on

தனது வெற்றி குறித்து, ட்விட்டர் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் எனக் கூறியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது எப்படி அமைதியாக, கண்ணியமாக, ஒழுக்கமாக செயல்பட்டதைப் போல, வெற்றியையும் அவ்வாறு கொண்டாடவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, கோத்தபய ராஜபக்சேவுக்கு,

புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளரான சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர்

பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com