ஆரம்ப கல்விக்கு புதிய செயலி - கூகுள் அறிமுகம்

கிராமப்புறங்களில் கற்றல் திறன் உயரும் என நம்பிக்கை
ஆரம்ப கல்விக்கு புதிய செயலி - கூகுள் அறிமுகம்
Published on
குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை கற்றுக் கொடுக்கும் வகையில், கூகுள் நிறுவனம் ' போலோ ' என்கிற செயலியை அறிமுகம் செய்தது. முதன் முதலில் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையில், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் குழந்தைகளுக்கான உச்சரிப்பு பயிற்சி உள்ளன. இந்த செயலியை உத்தரபிரதேச மாநில மாணவர்களிடம், சோதனை செய்ததில் கற்கும் திறன் அதிகரித்துள்ளது என்றும், இதனால் கிராமப்புற மாணவர்களின் திறன் மேம்படும் என்றும் கூகுள் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com