2-ஆவது முறையாக இத்தாலி அதிபரானார் கியூசெப்பி கான்ட்டே, 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

இத்தாலி பிரதமராக இரண்டாவது முறையாக கியூசெப்பி கான்ட்டே நேற்று பதவியேற்றார்.
2-ஆவது முறையாக இத்தாலி அதிபரானார் கியூசெப்பி கான்ட்டே, 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்
Published on

இத்தாலி பிரதமராக இரண்டாவது முறையாக கியூசெப்பி கான்ட்டே நேற்று பதவியேற்றார். அவருக்கு அதிபர் செர்ஜியோ ம​ட்டரிலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கியூசெப்பி கான்ட்டே உடன் 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பைவ் ஸ்டார் இயக்கத்தின் சார்பில் 10 பேரும், சென்டர் லெப்ட் இடதுசாரி இயக்கம் சார்பில் 9 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். தொழில் நுட்ப வல்லுநர் உள்பட மேலும் 2 பேரும் அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றனர். புதிதாக பதவியேற்றுள்ள கான்ட்டே அரசு முந்தைய ஆட்சிக் காலத்தை போல அல்லாமல், இந்த முறை ஐரோப்பிய கூட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு பக்கப்பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஒரு சில நாட்களில் கோன்ட்டே அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், குடியேற்ற விதிகளில் புதிய அரசு மென்மையான போக்கை கடைபிடிக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com