Germany Law | ஜெர்மனியில் மீண்டும் அமலுக்கு வந்த சர்ச்சைக்குரிய ராணுவ சட்டம் - கொதித்த மக்கள்

x

Germany Law | ஜெர்மனியில் மீண்டும் அமலுக்கு வந்த சர்ச்சைக்குரிய ராணுவ சட்டம் - கொதித்த மக்கள்

சர்ச்சைக்குரிய ராணுவ சட்டத்தை நிறைவேற்றிய 'ஜெர்மனி' ஜெர்மனியில் சர்ச்சைக்குரிய ராணுவ சட்டம் நிறைவெற்றப்பட்டுள்ளதால், அந்நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது...

ஜெர்மனியின் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய ராணுவ சட்டம் அமல் படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல நாட்களாக பொதுமக்கள் எதிர்க்கும் 'கட்டாயப்படுத்தல் சட்டத்தை', 'dual track system' மூலம் அமல்படுத்தி மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகின்ற காரணத்தால், ஐரோப்பிய நாடுகளின் NATO இலக்கை பூர்த்தி செய்யும் விதமாக இந்த 'dual track system' அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஜெர்மன் ராணுவத்தில் தன்னார்வத்தோடு சேருபவர்களின் எண்ணிக்கையில் தட்டுபாடு ஏற்பட்டால் நாட்டின் தேவைக்காக கட்டாயப்படுத்தி சேர்த்து கொள்ளும் சட்டத்தை அறிமுகப்படுத்தி ராணுவப்படையின் எண்ணிக்கையை 260,000ஆக ஜெர்மனி அதிகரித்துள்ளது. 2011ஆம் ஆண்டு 'கட்டாயப்படுத்தல்' இடைநிறுத்தம் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அமலுக்கு வந்ததால், தலைநகரில் உள்ள பாராளுமன்றத்தின் முன்பு பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்