ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கு : 100 ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் கல்லறைகள்... பார்வையாளர்கள் வருகை புரிந்து மரியாதை

Published on

மிகவும் பரபரப்பான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியை நீதிமன்ற குற்றவாளி என நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், மின்னியபோலிசில் உள்ள காவல் துறையினரின் அராஜகத்தால் உயிரிழந்த 100 ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் கல்லறைகள் அடங்கிய, "சே தெயர் நேம்ஸ் சிமிட்ரி" என்ற கல்லறைத் தோட்டத்திற்கு பார்வையளர்கள் வருகை புரிந்து மரியாதை செலுத்தினர். இந்தக் கல்லறைகளில் புதைக்கப்பட்ட அனைவருமே தவறாக குற்றம் சாட்டப்பட்டு காவல்துறையினரின் நடவடிக்கையால் உயிரிழந்தவர்கள் ஆவர். ஒவ்வொரு கல்லறையிலும், இறந்தவர்களின் பெயர், பிறந்த மற்றும் இறந்த தேதியுடன், "ரெஸ்ட் இன் பவர்" என்ற வாக்கியமும் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்ப்டத்தக்கது

X

Thanthi TV
www.thanthitv.com