Gaza | Israel Hamas War | போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் கோரதாண்டவம் - மீண்டும் காசாவில் ரத்த ஆறு

x

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் காசாவில் 80 பேர் உயிரிழந்தனர் என்று காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே அக்டோபர் 10-ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தபோதிலும், ஒப்பந்தத்தை மீறியதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த ஞாயிறன்று, ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்து விட்டதாக கூறி, இஸ்ரேல் ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு, இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 80 பேர் உயிரிழந்தனர் என்றும், 303 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் காசா தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்