Bihar Flood | Temple | கங்கையில் வெள்ளம் - அடித்துச் செல்லப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான கோவில்..

கங்கையில் வெள்ளம் - அடித்துச் செல்லப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான கோவில்..

Bihar Flood | Temple | கங்கையில் வெள்ளம் - அடித்துச் செல்லப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான கோவில்.. வெளியான அதிர்ச்சி காட்சி பீஹார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில், கங்கை நதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக 100 ஆண்டுகள் பழமையான துர்க்கை கோயில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. பாகல்பூர் ராகோபூர் பகுதியில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க "சைதி துர்கா தேவி ஆலயம்", ஆற்றின் திடீர் நீரோட்ட மாற்றம் மற்றும் பலத்த மண் அரிப்பால் சில நொடிகளில் ஆற்றுத் தண்ணீருக்குள் சரிந்து மூழ்கியது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சியை ஏராளமான கிராம மக்கள் கரையோரம் நின்று பார்த்தனர். இக்கோயிலுடன் சேர்த்து, அப்பகுதியில் இருந்த ஒரு அனுமன் கோவிலும், 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கங்கை நதியின் போக்கில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத மாற்றங்களால் அப்பகுதியில் நிலைமை மிகவும் சவாலாக மாறியுள்ளது....

X

Thanthi TV
www.thanthitv.com