பிரிட்டன் பிரதமரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய பிரதமர் மோடி

ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றுள்ள

பிரதமர் மோடி, மாநாட்டின் முதல் அமர்வில் பங்கேற்ற

பிறகு, பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து

பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது,

இந்தியாவை விட்டு தப்பியோடி பிரிட்டனில் தஞ்சம்

அடைந்துள்ள, பொருளாதார குற்றவாளிகளான விஜய்

மல்லையா, நீரவ் மோடி விவகாரத்தை எழுப்பினார்.

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று

அதனை திருப்பி செலுத்தாமல், தொழிலதிபர்கள் விஜய்

மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் பிரிட்டனில்

தஞ்சமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com