ஏழை நாடுகள் செலுத்த வேண்டிய கடன்களை ஒத்தி வைப்பதற்கு ஜி 20 நாடுகள் கூட்டமைப்பு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபிய நிதியமைச்சர் பேசுகையில், கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கம் காரணமாக ஏழை நாடுகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. இந்த நிலையில் அவர்கள் அளிக்க வேண்டி கடன்களை இந்த ஆண்டு இறுதி வரை செலுத்த தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.