முன்னாள் மிஸ் புனே தற்கொலை வழக்கு - பெற்றோருக்கு முதல்வர் உறுதி
முன்னாள் மிஸ் புனே தற்கொலை வழக்கு - பெற்றோருக்கு முதல்வர் உறுதி
Summary
முன்னாள் மிஸ் புனே த்விஷா ஷர்மா தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரி குடும்பத்தினர் வலியுறுத்திய நிலையில், விசாரணை நேர்மையாக நடத்தப்படும் என மத்தியபிரதேச மாநிலத்தின் முதல்வர் மோகன் யாதவ் உறுதியளித்தார்.
வரதட்சணை கொடுமையால் நொய்டாவை சேர்ந்த த்விஷா ஷர்மா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக த்விஷாவின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.
மேலும் அவரது பெற்றோர் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவை சந்தித்து, சிபிஐ விசாரணை மற்றும் இரண்டாவது உடற்கூறு ஆய்வு நடத்த வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.
