Lebanon | Israel | லெபனானில் பற்றியெரியும் தீ - அதிரடியாக தாக்கிய இஸ்ரேல்
Lebanon | Israel | லெபனானில் பற்றியெரியும் தீ - அதிரடியாக தாக்கிய இஸ்ரேல் #lebanon #israel #iran #thanthitv லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்த தங்களுக்கு உரிமை உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதனிடையே, இஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதை ஹிஸ்புல்லா தலைவர் ஷேக் நைம் காசிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இஸ்ரேல் வெளியேறுதல் மற்றும் கைதிகள் விடுதலை உள்ளிட்ட 5 நிபந்தனைகளை முன்வைத்துள்ள அவர், தங்களின் ஆயுதங்களைக் கைவிடப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். கடந்த மார்ச் 2 முதல் இருதரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமைதியை நிலைநாட்ட லெபனான் அதிபர் ஜோசப் அவூன் வலியுறுத்தியுள்ளார்.
