வரிசையாக விரையும் போர் விமானங்கள் - ஒரு முடிவோடு உள்ளே இறங்கிய அமெரிக்கா
மத்திய கிழக்கில் போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா
இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் நாளுக்குநாள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா தனது போர் விமானங்களை அனுப்பியுள்ளது. குறிப்பாக, F-16, F-22 மற்றும் F-35 ஆகிய போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் வகையில் இந்த போர் விமானங்களின் செயல்பாடுகள் அமையும் என்றும் தெரிவித்தனர். ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், போர் விமானங்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
