உலக கோப்பை கால்பந்து வெற்றி: உற்சாக வெள்ளத்தில் பிரான்ஸ் மக்கள்

உலக கோப்பை கால்பந்து வெற்றி: உற்சாக வெள்ளத்தில் பிரான்ஸ் மக்கள்
உலக கோப்பை கால்பந்து வெற்றி: உற்சாக வெள்ளத்தில் பிரான்ஸ் மக்கள்
Published on
உலக கோப்பை கால்பந்து தொடரை கைப்பற்றி, நாடு திரும்பிய பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரீஸில் உள்ள அரண்மனைக்கு பேருந்தின் மூலம் வீரர்கள் அழைத்து செல்லப்பட்ட போது, அவர்களை வரவேற்பதற்கு வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்திருந்தனர். பிரன்ஸின் தேசிய கொடியை ஏந்தியவாறு, வீரர்களுடன் அரண்மனைக்கு பேரணியாக சென்ற ரசிகர்கள் கோஷங்களை எழுப்பி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரான்ஸ் நாட்டு தேசிய கொடியின் மூவர்ண நிறத்தில் வீரர்களை வரவேற்கும் விதமாக விமான சாகசம் இடம் பெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com