Dubai | Girl Baby | முதல்நாள் பள்ளி செல்லும் தன் ஆசை மகளுக்கு ரூ.3.4 கோடி செலவு செய்த தந்தை
முதல்நாள் பள்ளி செல்லும் தன் ஆசை மகளுக்கு ரூ.3.4 கோடி செலவு செய்த தந்தை
முதல்நாள் பள்ளி செல்லும் தன் ஆசை மகளுக்கு ரூ.3.4 கோடி செலவு செய்த தந்தை துபாயில் தனது மகளின் முதல் நாள் பள்ளிப் பயணத்தை, மறக்க முடியாத நினைவாக மாற்றிய தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்க வியாபாரியான தந்தை தனது மகள் தஹப்பிற்காக, சுமார் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை, பள்ளிப் பேருந்து போன்று மாற்றியுள்ளார். அதோடு காரின் மேற்கூரையில் ராட்சத வடிவிலான பென்சில், அளவுகோல் உள்ளிட்ட வடிவமைப்புகளையும், மகள் தஹப்பின் பெயரையும் பொறித்திருந்தார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.
