நடுக்கடலில் தத்தளித்த மகளை காப்பாற்ற கடலுக்குள் குதித்த தந்தை
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் கப்பலில் இருந்து தவறி விழுந்த தனது மகளை காப்பாற்ற தந்தையும் உடனடியாக கடலில் குதித்து தத்தளித்த நிலையில், இருவரும் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஃபோர்ட் லாடர்டேல் Fort Lauderdale கடற்கரைக்கு சில மைல் தொலைவில், டிஸ்னி கப்பலில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தனது மகள் கடலில் தவறி விழுந்ததை கண்டு பதறிய தந்தை, தானும் கடலில் குதித்து காப்பாற்ற முயன்றுள்ளார். இருவரும் தண்ணீரில் தத்தளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு படகில் விரைந்த மீட்புக்குழுவினர், இருவரையும் மீட்டு கடற்கரைக்கு அழைத்து வந்தனர்.
Next Story
