இளைஞர்களை கவரும் புதிய வசதி - விரைவில் அறிமுகம் செய்கிறது பேஸ்புக்

டேட்டிங் எனப்படும் தனியான காதல் சந்திப்பு வசதியை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ள பேஸ்புக் நிறுவனம்,அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது.
இளைஞர்களை கவரும் புதிய வசதி - விரைவில் அறிமுகம் செய்கிறது பேஸ்புக்
Published on

இளைஞர்களை கவரும் வகையில் தனியான காதல் சந்திப்பு வசதியை பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப்போவதாக அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்திருந்தார்.தற்போது இதற்கான பணிகளை தொடங்கி, சோதனை முயற்சியாக தனது ஊழியர்களை வைத்தே இந்த வசதியை பேஸ்புக் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இதில் ஊழியர்கள் கூறும் குறைகளை சரி செய்து பின்னர் அதிகாரப்பூர்வமாக, டேட்டிங் எனப்படும் தனியான காதல் சந்திப்பு வசதியை அறிமுகப்படுத்த உள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். பேஸ்புக்கின் இந்த முயற்சி நவீனகால இளைஞர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com