சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம் செய்தித் துறையில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூர் அளவிலான செய்திகளை படிப்பதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், அதில் களமிறங்குவதாக கூறியுள்ள அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகள், இதற்கான உலகம் முழுவதும் பல செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும், ஆயிரம் பத்திரிகையாளர்களை பணிக்கு அமர்த்த உள்ளதாவும் கூறியுள்ளனர்.