

3 கோடிக்கும் அதிகமானோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பலரது பேஸ்புக் கணக்குகள் தன்னிச்சையாக லாக் அவுட் ஆனதை தொடர்ந்து, கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் இதுவரை மவுனம் காத்துவந்த பேஸ்புக் நிறுவனம், 3 கோடிக்கும் அதிகமானோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது உண்மை என ஒப்புக்கொண்டுள்ளது. செல்போன் எண், மின் அஞ்சல் முகவரி உள்பட பல்வேறு தகவல்கள் திருடப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதால், பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.