காசாவை கதிகலங்க விடும் வெடிச்சத்தம் - டிரம்ப் கொடுத்த அறிவிப்பு

x

காசாவில் தொடரும் வெடிச்சத்தம்... போர் நிறுத்த பேச்சு நடக்குமா?

காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் தனது தூதுக்குழுவை கத்தாருக்கு அனுப்ப உள்ள நிலையில், காசாவில் நீடிக்கும் வெடிச்சத்தத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்யத் தேவையான நிபந்தனைகளை ஏற்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். எனினும், ஹமாஸ் போர்நிறுத்த திட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இஸ்ரேல் கூறியது.

இந்நிலையில், காசாவில் அதிகாலையில் 5 நிமிடங்களுக்குள் தொடர் வெடிச்சத்தம் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில், கத்தாரில் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்