

கொள்ளுப் பேரனுடன் 102 வயது மூதாட்டியின் உற்சாக நடனம்... இணையத்தில் பரவும் வீடியோ
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள அஜோ நகரில் 102 வயது மூதாட்டி ஒருவர், தனது கொள்ளுப் பேரனுடன் ஆடி மகிழ்ந்துள்ளார். கைகளை உயர்த்தியும், அந்த சிறுவனோடு கைகோர்த்தும் உற்சாகம் பொங்க அந்த மூதாட்டி நடனமாடிய நிலையில், அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.