ஐரோப்ப நாடுகளில் கடும் பனி பொழிவு மற்றும் குளிர் நிலவி வரும் நிலையில், கிரீஸ் நாட்டில் சாலைகளில் படுத்து உறங்கும் மக்களுக்கு வீடு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஏதென்ஸில் ஆதரவற்றோருக்கென பொது இருப்பிடம் மற்றும் உணவு வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது. இதுவரை இந்த சேவையின் மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.