எட்டுத்திக்கும் கொட்டிக்கிடக்கும் அழகு...

எட்டுத்திக்கும் கொட்டிக்கிடக்கும் அழகு...
Published on

வாரம் முழுக்க அறக்க பறக்க.. வேலைக்கு ஓடி ஓடி டயர்ட் ஆகிபோன நாம இன்னைக்கு அப்படியே ஜாலியா ரிலாக்சா ஊர் சுத்தி பார்த்து எனர்ஜிய ரீஜார்ஜ் பண்ணிக்க போற நாடு Estonia ( எஸ்டோனியா).

ஊருக்குள்ள கால அடி எடுத்து வைக்கிறதுக்கு முன்னாடி அந்த நாட்ட பத்தி நாளு நல்ல விசயங்கள தெரிஞ்சுக்கிட்டு போகனும்னு சொல்லுவாங்க.

அப்படி இந்த நாட்டபத்தி சில விசயங்கல பேசலாம்னு நினச்சா அதோட தேசிய கொடியில இருந்தே நம்மல ஆச்சரிய பட வைக்கிறாங்க.

மூனு கலர்ல இருக்குற இந்து தான் Estonia வோட தேசியக் கொடி.

இது அவங்க ஊர்ல tricolor நு சொல்லுவாங்க. இது தான் உலகத்துலயே பழமையான தேசிய கொடியாம்.

அதுமட்டுமில்ல இன்னைக்கெல்லாம் நாம டிஜிட்டலா மின்னனு ஓட்டு மிஷின யூஸ்பண்ணிக்கிட்டு இருக்கோமே அத முதல்ல நடைமுறைக்கு கொண்டு வந்ததும் இந்த நாட்டுகாரங்க தான்.

50 சதவிகிதத்துக்கு மேல காடுகலால சூழப்பட்டிருக்குற எழில் கொஞ்சும் நாடு தான் இந்த Estonia.

அதோட 2000 தீவுக்கூட்டங்களும் இந்த நாட்டோட எல்லைக்குள்ள இருக்குது. பழமையான கட்டிடங்களுக்கும் வரலாறுகளுக்கும் இந்த நாட்டுல பஞ்சமே இல்ல. அதே நேரம் டெக்னாலஜிலயும் இவங்க எப்பவும் முன்னாடியா தான் இருகாங்க.

அதுக்கு சாட்சி தான் இந்த நாட்டோட ஐடி இன்டஸ்ட்ரி.

2007 லயே இவங்க நாட்டோட டேட்டாகள எல்லாம் , டிஜிட்டலைஸ் பண்ணி வச்சிருக்காங்க.

அத ஒரு சைபர் கும்பல் ஆட்டைய போட்டதால, மிகபெரிய முயற்சிக்கு அப்பறமா data embassies உலகத்துலயே முதல் முதல கிரியேட் பன்ணி இருகாங்க இந்த Estonia கவர்மெண்ட்..

சரி சரி ஓவரா ஊர் பெருமையே பேசிக்கிட்டு இருந்தா எப்படி?

வாங்க நம்ம ட்ரிப்ப ஸ்டார்ட் பண்ணலாம்.

முதல்ல நாம வந்து லேன்ட் ஆன சிட்டி தான் Tallinn ( தாலின்) .

இந்த நாட்டோட தலை நகரமா இருக்குற இந்த சிட்டிய உச்சியில இருந்து ரசிக்கனும்னே கட்டி வச்சது தான் இந்த

Tallinn TV Tower .

பிரீத்...

கிட்டத்தட்ட 1,030 அடி உயரம் இருக்குற இந்த டவர 1980 லயே கட்டி முடிச்சுட்டாங்க. ஆனா அப்போலாம் இது டூரிஸ்பார்ட்டா இல்ல, டிவி, ரேடியோ மாதிரி ஒளிபரப்பு நோக்கத்துக்காக தான் இத கட்டி இருக்காங்க.

ஆனா பாருங்க நம்ம ஊர் மக்கள் வீட்டுல உர்காந்து டிவிய பாக்குறத விட்டுட்டு கூட்டம் கூட்டமா வந்து இந்த டவர வேடிக்க பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அதனால் இது ஒரு நல்ல ஐடியாவே இருக்கேனு சொல்லி,

இந்த டவர் உச்சியில ஒரு அப்ஸர்வேஷன் டெக்க உருவாக்கி இருக்காங்க.

அதுமட்டுமா உள்ளயே, ரெஸ்டாரண்ட் எல்லாம் கட்டி விட்டு ஒரு பில்டிங் குள்ளயே பிக்னிக்க முடிக்கிற அளவுக்கு வேற லெவல்ல வேலை பாத்துருக்காங்கபா..

என்ன... மேல இருந்து கீழ பார்த்தா தான், கொஞ்சம் அடி வயிறு கலக்குது.

அடுத்ததா நாம ஜெயிலுக்கு போக போறோம்..

எது ஜெயிலுக்கா ...? அப்படினு ஷாக் ஆகாதிங்க. பல வருசத்துக்கு முன்னால ஜெயில்... இப்போ அது டூரிஸ்ட் ஸ்பார்ட்..

பிரீத்...YO TOUR Rummu Prison

கடல்லுக்குள்ள கம்பீரம நிக்கிற இது தான் Rummu Prison.

இந்த கட்டிட்டத்தோட அடித்தளமே கடல்லுக்கு அடியில இயற்கையா அமைஞ்சிருக்குற, லைம் ஸ்டோன்களால ஆனது. தண்ணிக்குள்ள கட்டப்பட்டிருக்குற இது இரண்டாம உலகப்போர் சமயத்துல

labour camp - அ இருந்துச்சு. அதுக்கப்பறம் Estonia, சோவியத் ஒன்றியத்துல ஒரு அங்கமா இருந்த நேரத்துல இந்த கட்டிடம் ஜெயிலா மாறி இருக்கு.

தண்ணிக்குள்ள இந்த சிறை இருந்ததால குற்றவாளிகள் இங்க இருந்து தப்பிக்கிறத கனவுல கூட நினச்சு பார்க்க முடியாது.

ஆனா இப்போ, இது ஒரு அட்டகாசமான unter watter diving ஏரியாவா மாறி இருக்கு. வருசம் முழுக்க இங்க வர்ர பல இளைஞர்கள்

உள் நீச்சல் அடுச்சு போய், ஒவ்வொரு செல்லையும் விசிட் பண்ணிட்டு வர்ராங்க.

===================

பாட்டு பாடி பால் கரக்குறத கேள்விபட்டுருக்கோம் ஆனா பாடியே சுதந்திரம் வாங்குனவங்க இந்த ஊர் காரங்க தான்.

1980 கள்ள மொத்த உலகத்தையும் ஆச்சரியபட்ட வச்ச Singing Revolution. தொடங்கின இடம் இந்த Song Festival Ground ல தான்.

பிரீத்...

பாரம்பரியமான பாட்டுக்கச்சேரி நடத்துறதுக்காக பயன்படுதிக்கிட்டு வந்த இந்த கிரவுண்டுல, லட்சகணக்கன மக்கள் ஒன்னு கூடி தங்கள்

நாட்டோட சுதந்திரத்துக்கான புரட்சி பாடல்ல பாடி இருக்காங்க.

சோவியத் ஒன்றியத்துல இருந்து விடுதலை கேட்டு இங்க தொடங்குனா இந்த பாட்டு புரட்சி, பக்கத்து நாட்டு வரை பத்திக்கிச்சாம்.

அதனால தான் இன்னைக்கு இந்த இடம் வெறும் கச்சேரி மைதானமா மட்டும் இல்லாம , விடுதலைக்கு அடையாளமாவும் மாறி இருக்கு.

அடுத்தா நாம வந்து சேர்ந்திருக்குற இடத்த பத்தி சொல்லனும்னா, திரும்புற இடத்துல எல்லாம் ஆச்சரியபடுத்துற ஒரு கலை தாயின்

ஹெஸ்ட் ஹவுஸ்சுனே இத சொல்லலாம்.

இந்த இடத்தோட பேரு telliskivi .

பிரீத்...YO TOUR telliskivi creative city

இந்த நாட்டுல இருக்குற மொத்த ஓவிய கலைஞரா இருந்தாலும், கைவினை பொருட்கள் செய்யுற வித்தகாரங்களா இருந்தாலும், அவங்களோட சொர்க பூமி தான் இந்த நகரம்.

வீட்டு சுவருல இருந்து, குட்டிகுவர் வரைக்கும் கிடைக்கிற இடத்துலலாம் தங்களோட கிரியேட்டிவிட்டிய ஓவியமா வரஞ்சுவச்சுருகாங்க.

அது மட்டுமில்லங்க நீங்க ஃபேஷன் பிரியரா இருந்த விதவிதமான ட்ரஸ்ல ஆரம்பிச்சு அக்சஸரிஸ் வரைக்கு அத்தைனையும் இங்க ஷாப்பிங் பன்னாலம்.

இப்படி முக்குக்கு முக்கு கற்பனை திறன் கொட்டிக் கிட்டகுறதால இத creative city நு செல்லாமா கூபுட்றாங்கலாம்..

பிரீத்....

இந்த சிட்டியோட இன்னொரு அதிசயத்ததான் இப்போ நாம பாக்க போறோம்.

அது தான் The Bastion Tunnels.

பிரீத்...

இந்த நகரத்துல இருக்குற கோட்டைகள்ல ஒன்னோட ஒன்னு இனைக்கிற மாதிரி இந்த சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டிருக்கு.

போர்காலத்துல, ராணுவ வீரர்களும், மக்களும் safe அ தப்பிச்சு போகுறதுக்காக தான் இத கட்டி இருக்காங்க. இதோட நீளம் கிட்டத்தட்ட 1.5 கிலோ மீட்டார்.

இந்த சுரங்க பாதைகளுக்குள்ள சின்ன சின்னதா சில room-ஸூம் இருக்குது.

300 வருசத்துக்கு முன்னாடி கட்டுன இந்த சுரங்க பாதைகள, இப்போ புதுசா

கட்டுன மாதிரி மெயின்டெய்ன் பன்னிட்டு இருக்காங்க. அதனால தான் இனைக்கும் மக்கள் பாதுகாப்பா உள்ள போய் velog பண்ணிட்டு இருகாங்க.

===================

அடுத்ததா நாம வந்திருக்கிற பிளேஸ் என்னனு உங்களுக்கு பாத்தாலே தெரிஞ்சிருக்கும்.

கெஸ் பன்ணினது சரி தான் ஒரு marine musium-க்கு தான் இப்போ நாம என்ட்ரிய கொடுத்திருக்கோம்.

பிரீத்...Tallinn Submarine musium

கப்பல கூட கரையில நினுக்கிடே பார்த்து ரசிச்சுட முடியும், ஆனா நம்ம வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்த்து ரசிக்கனும்னு ஆசைப்படுறது இந்த நீர் மூழ்கி கப்பல்கள தான் .

அப்படி ஆசபடுற மக்கள் தூரத்துல இருந்து பாக்குறது மட்டும் இல்லாம, உள்ளே போய் நல்லா சுத்திபார்க்கனும்னு ஆரம்பிச்சது தான் இந்த

Tallinn Submarine musium.

இதோ நிக்கிறானே பெரியவன். இவன் பேரு தான் EML Lembit.

இரண்டாம் உலகப்போர் சமயத்துல எதிரி நாட்டு கப்பல்கல முங்கு நீச்சல்லயே போய் முழ்கடுச்ச கில்லாடி பயபுள்ள.

பல பணக்கார நாட்டு நேவி படைகளே, கடல் பரப்புல அல்லாடிக்கிட்டு இருந்த சமயத்துல, சின்ன நாடான Estonia ல இருந்து கிளம்புன இந்த EML Lembit, அன்டர் வாட்டர ஆட்டம் காண வச்சுட்டாப்புல.

இப்படி ஒரு பெருமையான அடையாளத்த மக்களுக்கு காட்டலனா நல்லாவா இருக்கும்..? சொல்லுங்க. அதான் பையனுக்கு வயசானதும் , ஒரு மியூசியம கட்டி, சிட்டிசன்கள் சுத்திப்பாக்குற இடமா மாத்தி விட்டுருக்காங்க.

நம்ம ஊர்ல ஊருக்கு ஒரு வில்லேஜ் விஞ்ஞானிகள தான பார்த்திருப்போம். ஆனா ஒரு ஊரே விஞ்ஞானிகளா இருந்த எப்படி இருக்கும்.. உள்ள போனதுமே ஆஹானு ஆச்சரிய படுற ஒரு இடம் தான் இந்த 

Tartu சிட்டியில இருக்குற இந்த AHHAA Science Centre ல 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டு பிடிப்புகள,

காட்சிப்படுத்தி இருக்காங்க. இத ஆரம்பிச்சதோட நோக்கமே அறிவியல் கண்டுபிடிப்புகள் கையகட்டி வேடிக்க பாக்குறது மட்டுமில்லாம,

எல்லோரும் களத்துல இறங்கி கத்துக்கனுங்கிறதுகாக தானாம்,

பாருங்களேன் பசங்க எப்பாடி ஐன்ஸ்டீனாவே மாறிடாங்கனு..

பிரமாண்ட நெருப்ப சுத்தி மக்கள் சந்தோசமா செலிபிரேட் பண்னிக்கிட்டு இருக்காங்களே இது தான் இந்த நாட்டுல ரொம்பவே ஃபேமஸ்ஸான The Bonfires Festiva.

கிட்டத்தட்ட 13 ஆம் நூற்றாண்டுல இருந்து இந்த கொண்டாடத்த ஃபாலோபண்ணிட்டு இருக்காங்களாம

ம்ம்ம்.. இதெல்லாம் estonia நாட்டோட்ட வெறும் 10 சதவிகிதம் தான்.

ஆனாலும் இப்போ நமக்கு நேரம் இல்லாததால ஊருக்கு கிளம்பியாகனும்.

ஸோ அடுத்தவாரம் இதே மாதிரி இன்னொரு நாட்டுல சந்திக்கலாம் bye...

X

Thanthi TV
www.thanthitv.com