நாள் ஒன்றுக்கு 1 லட்சம் கொரோனா பரிசோதனைகள் என்ற இலக்கை இங்கிலாந்து கடந்துள்ளது. மே 1ஆம் தேதி காலை நிலவரப்படி, அங்கு 24 மணி நேரத்தில், 1 லட்சத்து 22 ஆயிரத்து 347 பேருக்கு கொரோனா தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவைப் பொறுத்த வரையிலும் தனிமைப்படுத்துதலும் சோதனைகளை அதிகப்படுத்தலுமே தீர்வு என்பதால் அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் நடத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்த வரையிலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளை சேர்த்து நாள் ஒன்றுக்கு 66 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளும் திறன் உள்ளது. இதனை 1 லட்சமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறியுள்ளார்.