எலான் மஸ்க் மகனால் மேஜையை மாற்றிய டிரம்ப்
எலான் மஸ்க்கின் 4 வயது மகன், மூக்கை துடைத்துவிட்டு கை வைத்த மேஜையை அதிபர் டிரம்ப் மாற்றியுள்ளார். அதிபர் மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில், கடந்த வாரம் எலான் மஸ்க் தனது மகனை அழைத்துச் சென்று, டிரம்புடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எலான் மஸ்கின் மகன், தனது மூக்கை துடைத்துவிட்டு, டிரம்ப் அமர்ந்திருந்த மேஜை மீது கை வைத்தார். இந்நிலையில், 145 வருடங்களாக இருந்த அந்த மேஜையை டிரம்ப் மாற்றியுள்ளார். இதற்கு காரணம் என்ன என்று தனது ட்ரூத் (Truth) சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், சீரமைப்பதற்காக தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Next Story
