மனிதனின் மூளைக்குள் பொருத்தப்பட்ட சிப்.."இனி மனதில் நினைத்தால் மட்டுமே போதும்"- அசத்திய எலான் மஸ்க்

x

நியூராலிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கிய எலான் மஸ்க், மனிதர்களின் மூளையில் சிப் பொருத்துவதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொண்டார். இதற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து, நியூராலிங்க் நிறுவனம் முதன்முறையாக மூலமாக மனிதனின் மூளையில் சிப் பொருத்தியுள்ளதாக, எலான் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சிப் பொருத்தப்பட்ட மனிதர்கள் தாங்கள் மனதில் நினைப்பதன் மூலம் செல்போன், கணினி உள்ளிட்டவற்றை இயக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கைகளின் செயல்பாடுகளை இழந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி இவற்றை பொருத்தும் திட்டம் இருப்பதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்