Elon Musk | ஆத்தாடி ரூ. 10,00,00,00,00,000 கோடி சம்பளமாம் - உலக வரலாற்றிலே இதுதான் பெரிய சாதனை

x

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கிற்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒரு ட்ரில்லியன் டாலர் ஊதியம் வழங்க பங்குதாரர்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், ஏஐ மற்றும் ரோபோக்களின் உதவியுடன் இயங்கும் கார்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதையொட்டி, தனக்கு ஒரு ட்ரில்லியன் டாலர் ஊதியம் வழங்க வேண்டுமென பங்குதாரர்களிடம் அவர் வலியுறுத்தினார். இந்த நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் நடைபெற்ற கூட்டத்தில், 75 சதவீத பங்குதாரர்கள் இதற்கு ஒப்புதல் அளித்ததால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு எலான் மஸ்கிற்கு ஒரு ட்ரில்லியன் டாலர் ஊதியம் வழங்கப்படவுள்ளது. இதையறிந்ததும் மேடை ஏறிய எலான் மஸ்க், உற்சாக மிகுதியில் ரோபோவின் அசைவுக்கு ஏற்ப நடனமாடினார்.


Next Story

மேலும் செய்திகள்