புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க் - அமெரிக்க அரசியலில் புது புயல்
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான தொழிலதிபர் எலான் மஸ்க், புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில், செயல்திறன் துறைத்தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய எலான் மஸ்க், டிரம்ப் முன்னெடுத்த ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் one big beautiful பில் மசோதாவை கடுமையாக விமர்சித்தார்.
இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் நாட்டின் கடன் அதிகரிக்கும் என்றும், அப்போது புதிய கட்சியை தொடங்குவதாகவும் கூறியிருந்தார். இந்த மசோதாவை அதிபர் டிரம்ப் நடைமுறைப்படுத்திய நிலையில், இரு கட்சிகளின் ஆட்சியிலிருந்து விடுபட வேண்டுமா? அமெரிக்கா கட்சியை தொடங்க வேண்டுமா? என்று எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சுமார் 65 சதவீத மக்கள், ஆம் என்று பதிலளித்ததாக தெரிகிறது. இந்நிலையில், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், அமெரிக்கர்கள் அரசியல் மாற்றத்தை விரும்புவதாகவும், மக்களுக்கு சுதந்திரத்தை திரும்பக் கொடுக்கும் வகையில், 'அமெரிக்கா கட்சி' தொடங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.