யானை பலம்.. அசுர வேகம்.. சீனாவுக்கு அதிர்ச்சி தந்த இந்தியா
ஜூனில் முடிவடைந்த காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பு அலசுகிறது.
உக்ரைன் போரின் விளைவாக பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டு, உலக பொருளாதாரம் கடும் பாதிப்பிற்குள்ளானது. இந்தியாவில் விலைவாசி உயர்வு வெகுவாக அதிகரித்து, ஏற்றுமதிகள் சரிந்து, பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
2022 ஜூன் காலாண்டில் 13.1 சதவீதமாக இருந்த இந்திய
பொருளாதார வளர்ச்சி, 2022 செப்டம்பர் காலாண்டில்,
உக்ரைன் போர் காரணமாக, 6.2 சதவீமாக சரிந்தது.
டிசம்பர் காலாண்டில் 4.5 சதவீதமாக மேலும் சரிந்த பின்,
2023 ஏப்ரல் காலாண்டில் 6.1 சதவீதமாக உயர்ந்தது.
இந்நிலையில், 2023 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான
காலாண்டில், இந்திய பொருளாதரம் 7.8 சதவீதம் வளர்ச்சி
அடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.
ஜூன் காலாண்டில் விவசாயத் துறை 3.5 சதவீதமும், உற்பத்தித் துறை 5.5 சதவீதமும், சேவைகள் துறை
10.3 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளன.
பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில், மிக அதிக வளர்ச்சி பெறும் நம்பர் ஒன் நாடாக இந்தியா தொடர்கிறது.
வளர்ச்சி விகிதத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனா, ஜூன் காலாண்டில் 6.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்திய பொருளாதாரத்தின் அளவு, கொரோனாவிற்கு முன்பு, 2019 ஜூனில் இருந்த அளவை விட தற்போது 13.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
இந்திய பொருளாதார வளர்ச்சி, வேகம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட குழப்பங்களால் ஏற்படும் தற்காலிக வளர்ச்சியல்ல என்றும் இந்த வளர்ச்சி முறையான வளர்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜூலையில், நிலக்கரி, உரங்கள், எஃகு உள்ளிட்ட
8 அடிப்படை உற்பத்தி துறைகள் 8 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
ஏப். - ஜூன் - இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8%
இந்திய பொருளாதார வளர்ச்சி
2022 ஏப். - ஜூன் 13.1%
2022 ஜூன் - செப். 6.2%
இந்திய பொருளாதார வளர்ச்சி
2022 அக். - டிச. - 4.5%
2023 ஜன. - ஏப். - 6.1%
இந்திய பொருளாதார வளர்ச்சி
2023 ஏப். - ஜூன் - 7.8%
தேசிய புள்ளியியல்
அலுவலகம் தகவல்
2023 ஏப். - ஜூன் வளர்ச்சி
விவசாயத் துறை 3.5%
உற்பத்தித் துறை 5.5%
சேவைகள் துறை10.3%
பெரிய பொருளாதார
நாடுகள் வரிசையில்,
பொருளாதார வளர்ச்சியில்
முதல் இடத்தில் இந்தியா
வளர்ச்சி விகிதத்தில்
2ஆம் இடத்தில் சீனா,
ஏப். - ஜூன் - 6.3%
இந்திய பொருளாதார
அளவு - 2019 ஜூன்
அளவை விட தற்போது
13.8% அதிகரிப்பு
பொருளாதார வளர்ச்சி,
வேகம் பெற, விலைவாசி
உயர்வினால் ஏற்பட்ட
குழப்பங்கள் காரணமல்ல
தலைமை பொருளாதார
ஆலோசகர் அனந்த
நாகேஸ்வரன் தகவல்
ஜூலை - நிலக்கரி,
உரங்கள், எஃகு உள்ளிட்ட
8 அடிப்படை உற்பத்தி
துறைகள் - 8% வளர்ச்சி
