வனவிலங்குகள் பாதுகாப்பு தூதராக குட்டி யானை நியமனம்

ஜிம்பாபே நாட்டு வனவிலங்குகளின் பாதுகாப்பு தூதராக, மையோ என்ற குட்டியானை நியமனம் செய்யப்பட்டுள்ளது.
வனவிலங்குகள் பாதுகாப்பு தூதராக குட்டி யானை நியமனம்
Published on

ஜிம்பாபே நாட்டு வனவிலங்குகளின் பாதுகாப்பு தூதராக, மையோ என்ற குட்டியானை நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வரும் யானைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஜிம்பாவே நாட்டை சேர்ந்த ராக்ஸி டாங்க்வெட்ஸ் என்ற பெண்மணி ஈடுபட்டுள்ளார். ஹராரேவில், யானைகளை பாதுகாக்கும் அமைப்பை நடத்தி வரும் இவர், ஆதரவற்ற குட்டியானைகளை மீட்டு, அவற்றை பராமரித்து, மீண்டும் வனப்பகுதிக்குள் விடும் சேவையை, தனது குழுவுடன் இணைந்து செய்து வருகிறார். ராக்ஸி குழுவினரால் மீட்கப்பட்ட மையோ என்ற யானை தற்போது வனவிலங்குகளின் பாதுகாப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com