ElSalvador | Jail | Police | ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட 486 பேர் மீதான வழக்கு விசாரணை

மத்திய அமெரிக்க நாடான எல்சால்வடாரில், MS-13 என்ற குற்றப் பின்னணிகள் கொண்ட பிரபல கும்பலைச் சேர்ந்ததாக கூறப்படும் 486 பேருக்கு எதிராக மாபெரும் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது. டெகோலுகாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மையம் என்ற கடுமையான பாதுகாப்பு உள்ள சிறையில், கை, கால் சங்கிலியிடப்பட்டு இருந்த கைதிகள், விசாரணையில் பங்கேற்றனர். 2012 முதல் 2022 வரை நடைபெற்றதாக கூறப்படும் ஆயிரக்கணக்கான கொலை, ஆயுத கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதில் விசாரணை நடைபெற்றது. மேலும் அங்கு நிலவும் கும்பல் வன்முறையை, கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த விசாரணை பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com